tamilnadu

img

ஒரு சுமார் டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்!

சென்னை,பிப்.22-  வியாசர்பாடியில் வீட்டில் செம்மரக்கட்டைகளைப் பதுக்கி வைத்திருந்த முகமது ரசூல் என்பவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை வியாசர்பாடியில் சுமார் 960 கிலோ செம்மரக்கட்டையை வீட்டில் பதுக்கி வைத்திருந்த முகமது ரசூல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் ரசூலை விசாரணை செய்ததில் செம்மரக்கட்டைகளை ஆந்திராவிலிருந்து நாகராஜ், ஈஸ்வரய்யா ஆகியோர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.