காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2-ன் மகளிர் துணைக்குழு சார்பில் எல்ஐசி உழைக்கும் மகளிர் வெள்ளிவிழா மாநாடு - குடும்ப சங்கமம் - கலைவிழா சனிக்கிழமையன்று (டிச.14) நடைபெற்றது. இதில் ஊழியர்களின் மக்கள் பணியை விளக்கும் வகையில் வைக்கப்பட்ட நிழற்படக் கண்காட்சியை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.விஜயா திறந்துவைத்தார். விழாவில் சமூகத்தில் தன்னலம் பாராது உழைக்கும் பேராசிரியர் சஸிதா, ஆசிரியர்கள் அ.அரவிந்தன், அசோகன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தென்மண்டல பொதுச் செயலாளர் செந்தில், வி.அனுஜா, துளசி, எம்.கிரிஜா, ஆர்.சர்வமங்களா, வி.ஜானகிராமன், கே.மனோகரன், எம்.தனசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.