tamilnadu

img

தோழர் கவுதமன் உடலுக்கு கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

சென்னை, மே 24-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதி, 105வது வட்ட (எம்எம்டிஏ) கிளைச் செயலாளர் க.கவுதமன் உடல்நலக்குறைவால் வியாழனன்று (மே 23) காலமானார். அவருக்கு வயது 47.தோழர் கவுதமனின் மனைவி கல்பனா மாதர் சங்க கிளைச் செயலாளராக செயலாற்றி வருகிறார். அவருக்கு விஸ்வாலெனின், லோகேஷ் ஸ்டாலின் என இரண்டு மகன்கள் உள்ளனர்.அரும்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.வேல்முருகன், எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், எஸ்.கே.முருகேஷ், பகுதிச் செயலாளர் பெ.சீனிவாசன், மாதர் சங்கத் தலைவர்கள் எஸ்.சரவணச்செல்வி, வி.தனலட்சுமி, சித்ரகலா உள்ளிட்டு பல்வேறு கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.இதனைத்தொடர்ந்து அன்னாரது உடல் வெள்ளியன்று (மே 24) அரும்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.