tamilnadu

img

அதானியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அதானியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் பாதுகாப்பு, அயலுறவு, ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறியும், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் நிறுவனங்களை ஏமாற்றியும் அதானி குழுமம் ரூ.6 ஆயிரத்து 300 கோடி அளவிற்கு மோசடியை அரங்கேற்றியிருப்பதாக அமெரிக்கா பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதனையடுத்து, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் அதானியை உடனடியாகக் கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கோரிக்கையை முன்வைத்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதானியை கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.