tamilnadu

img

தோழர் எஸ்.வி.எஸ்.மணியின் 10வது ஆண்டு நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை-செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் எஸ்.வி.எஸ்.மணியின் 10வது ஆண்டு நினைவு தினமான செவ்வாயன்று (ஜன.21) அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மூத்த தோழர் டி.நந்தகோபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோழர் எஸ்.வி.எஸ்.மணியின் மனைவி பத்மாவதி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், பகுதிச் செயலாளர்கள் சி.செங்கல்வராயன் (விருகை), இ.மூர்த்தி (தி.நகர்), மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயசங்கரன், எம்.ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் தோழர் எஸ்.எஸ். மணியின் சொந்த ஊரான தஞ்சை வடசேரியில் அவரது குடும்பத்தார் சார்பில் அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.