tamilnadu

img

‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை,ஜன.19- ‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய சாலை விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்து கள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் “சாலைப்  பாதுகாப்பு வாரம்” கடைப் பிடிக்கப்படு கிறது. இந்த ஆண்டு, 31-வது சாலைப் பாது காப்பு வார விழா 20ஆம் தேதி முதல் 27ஆம்  தேதி வரை கடைப்பிடிக்கப்படும். (26ஆம் தேதி நீங்கலாக) சாலைப் பாதுகாப்பு வார விழாவில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டு நர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குச் சாலைப் பாது காப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழ்நாடு அரசு, மேற் கொண்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை களின் காரணமாக, 2019ஆம்  ஆண்டில் ஏற்  பட்ட சாலை விபத்துகள் 2016-ம் ஆண்டுடன்  ஒப்பிடுகையில் 25.60 சதவீதம் என்ற அளவி லும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு கள் 43.10 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளன. மேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்க ளுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவி லிருந்து 2019-ம் ஆண்டில் 3 நபர்களாகக் குறைந்துள்ளது. அத்துடன், தமிழ்நாடு அரசின் ‘108’ அவசரக்கால ஆம்புலன்ஸ் வாகனங்கள், விபத்துக்கள் ஏற்படும் இடங்களுக்கு விரை வாகச் சென்று சேவை புரிவதால் விபத்தி னால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு வருகின்றன. சாலை விபத்துகளினால் ஏற்படும் உயி ரிழப்புகளைத் தவிர்த்திடவும், “விபத் தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை எய்தி டவும், மக்கள் அனைவரும் சாலை விதி களை முழுமையாகக் கடைப்பிடித்து, தங்கள்  பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.