மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-இன் கீழ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.
இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் அசோக் வர்தன், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர், பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.