tamilnadu

கருப்பு பூஞ்சைக்கு மருந்து வாங்க முதலமைச்சர் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு....

சென்னை:
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காகத் தேவைப்படும் “ஆம்போடெரிசின்” உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கருப்பு பூஞ்சை  அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் போதுமான மருந்துகள் இல் லாததால் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கான  மருந்துகள் இல்லை. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் மாற்று மருந்துகள் மூலம் இந்த நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

தமிழகத்தில் 921 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதித்துள்ளது. இவர்களில் 95 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிக்கு கை கொடுக் கும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இம் மாதம் 7ஆம் தேதி வரைக்கும் 280 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது.

இந்த நிதி முழுக்க முழுக்க கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டிருந்தது. அந்த அடிப்படையிலேயே இதுவரைக்கும் செய்யப் பட்டு வருகிறது.இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.