tamilnadu

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,திருவள்ளூர் ஆண்டுப்பட்டிகை

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,திருவள்ளூர் ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்.95/2018


கடந்த 24.03.2014 அன்று அம்பத்தூர் – 2 சரக மருந்துகள் ஆய்வாளராக இருந்த திரு.எஸ்.பாலமுருகன் அவர்கள்,எண்.4/1334, முகப்பேர் மேற்கு, சென்னை-37 என்ற முகவரியில்

அமைந்துள்ள Fiziks Life Science என்ற மருந்துகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும், ஆய்வின்போது,அந்த நிறுவனத்தில் அதன் மேலாண் பங்குதாரரான திரு.கே.முரளிகிருஷ்ணன் என்பவர் உடன் இருந்ததாகவும், மேற்படி ஆய்வின்போது, அந்த மருந்துகள் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த கே.ஆர்.மோகனமுத்து என்பவர் 31.10.2013 அன்று அந்த நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், மற்றொரு பங்குதாரர் திருமதி எம்.லீலாவதி என்பவர் புதிதாக பங்குதாரராக சேர்க்கப்பட்டிருந்ததாகவும், மேற்படி நிறுவன அமைப்பில் மாற்றம் நிகழ்ந்துள்ள நாளிலிருந்து உரிமம் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும்,மேற்படி உரிமத்தை புதுப்பிக்க உரிமம் வழங்கும் அதிகார அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்றும், ஆகவே,

ஆய்வு நாளன்று மேற்படி மருந்து நிறுவனம் உரிமம் இன்றி இருந்ததாகவும், 24.03.2014 அன்று அந்த நிறுவனத்தில் இருந்துமொத்தம் 18 வகையான மருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆகவே, ஆய்வு நாளன்று உரிமம் இன்றி மருந்துகள் கையிருப்பு வைத்திருந்ததாக தெரியவந்ததாகவும், மேற்கண்ட முரண்பாடு காரணமாக Fizks Life Science என்ற மருந்துகள் நிறுவனத்தினை 1வது எதிரியாகவும், அந்த மருந்துகள்

நிறுவனத்தின் மேலாண் பங்குதாரர் திரு.கே.முரளிகிருஷ்ணன் என்பவரை 2வது எதிரியாகவும் சேர்த்து, மேற்படி எதிரிகள் இருவரும் மருந்துகள் மற்றும் அழகுச் சாதனச் சட்டம் பிரிவு 18(C) உடன் இணைந்த பிரிவு 27(b)(ii)ன்படி குற்றம் செய்திருப்பதாக குறிப்பிட்டு வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு இந்நீதிமன்றத்தால் மேற்படி வழக்கு விசாரிக்கப்பட்டத்தில், இரண்டு எதிரிகளையும் குற்றவாளிகள் என்று இந்நீதிமன்றம் தீர்மனித்து மேற்படி பிரிவின் கீழான குற்றத்திற்கு இரண்டு எதிரிகளுக்கும் நீதிமன்றம் கலையும் வரை சிறைத்தண்டனை விதித்தும், மேலும் அபராதம் தலா ரூ.1,00,000/- விதித்தும், கட்டத்தவறினால் தலா 3 மாதங்கள் மெய்க்காவல் சிறைத்தண்டனை விதித்தும், மேலும் 2 வது எதிரி தனக்காகவும், 1 வது எதிரி நிறுவனத்தின் சார்பிலும், சிறைத்தண்டனையை அனுபவிக்கவும், அபராதத்தொகை செலுத்த வேண்டு மென்றும் இந்நீதிமன்றத்தில் 15.02.2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டு மொத்த அபராதத்தொகையான ரூ.2,00,000/- எதிரிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.


ஓம்./- T.V.மணி

தலைமை நீதித்துறை நடுவர் 

திருவள்ளூர்

//உண்மை நகல்//

சிரஸ்ததார்

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருவள்ளூர்.



தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,திருவள்ளூர் ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்.2/2011


கடந்த 29.12.2009 அன்று திருவள்ளூர் சரக மருந்துகள் ஆய்வாளராக இருந்த திரு.முகம்மது கமால், அவர்கள், ESI Dispensary, திருவள்ளூரில் இருந்து மாதிரி மருந்து Betametha

zone Valerate Ointment IP, Batch No.S/073. தயாரிப்பு தேதி – 09/2009, காலாவதி -24 மாதங்கள், தயாரிப்பாளர் – மெக்லாரன் பயோடெக்

பிரைவேட் லிமிடெட் என்ற மருந்தினை படிவம் 17 மூலம் மாதிரிக்காக எடுத்து, படிவம் 18 மூலம் அதை அரசுப்பகுப்பா ய்வுக் கூடத்திற்கு பகுப்பாய்விற்க்காக அனுப்பியதாகவும், அரசு பகுப்பாய்வுக் கூடத்தில் இருந்து மேற்படி மாதிரி மருந்துதரமற்ற மருந்து அதாவது, IP Sepcification for Betamethazone Valerate Ointment with respect to the content of Betametazone in Betamethazone Valerate என்று படிவம் 13ல் அறிக்கை பெறப்பட்ட தாகவும், மேற்கண்ட மருந்து பி-6, சிட்கோ தொழிற்பேட்டை, ஓசூர் – 635 126 என்ற முகவிரியில் பெறப்பட்டதாகவும், மேற்கண்ட மருந்து பி-6, சிட்கோ தொழிற்பேட்டை, ஓசூர் – 635126 என்ற

முகவரியில் அமைந்துள்ள மெக்லாரன் பயோடெக் பிரைவேட் லிமிடெட் என்ற மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நிறுவனத்தின் மேலான் இயக்குநர் திரு. தேஜ்பால் பாண்டியா என்பவர் எனவும், மருந்துகள் ஆய்வாளர் 24.08.2010 அன்று மேற்கண்ட தரமற்ற மருந்து தயாரிப்புக்கான காரண விளக்கம் கோரும் அறிவிப்பு மெக்லாரன் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பட்டதாகவும், அதற்கு 24.09.2010 தேதியிட்ட பதில் கடிதம் அனுப்பியிருந்ததாகவும், அந்த கடிதத்தில் அவர்கள் அரசு பகுப்பாய்வுக் கூடத்தின் பகுபாய்வு அறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், மத்திய பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரியை அனுப்ப கேட்டிருந்ததாகவும், அவர்களுடைய பதில் ஏற்புடையதாக இல்லாத காரணத்தினால், மேற்படி மெக்லாரன் பயோடெக் பிரைவேட்லிமிடெட் மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்தினை 1வது எதிரியாகவும், அந்த மருந்துகள் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தேஜ்பால் பாண்டியா என்ப

வரை 2 வது எதிரியாகவும் சேர்த்து, மேற்படி எதிரிகள் இருவரும் மருந்துகள் மற்றும் அழகு சாதனச்சட்டம் பிரிவு 18(a)(i) உ/இ பிரிவு 27(d)ன்படி குற்றம் செய்திருப்பதாக குறிப்பிட்டு வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு இந்நீதிமன்றத்தால் மேற்படி வழக்கு விசாரிக்கப்பட்டதில், இரண்டு எதிரிகளையும் குற்றவாளிகள் என்று இந்நீதிமன்றம் தீர்மானித்து, மேற்படி பிரிவின் கீழான குற்றத்திற்கு இரண்டு எதிரிகளுக்கும் நீதி

மன்றம் கலையும் வரை சிறைத்தண்டனை விதித்தும், மேலும் அபராதம் தலா ரூ.20,000/- விதித்தும், கட்டத்தவறினால் தலா 1 மாதம் மெய்க்காவல் சிறைத்தண்டனை விதித்தும், மேலும் 2வதுஎதிரி தனக்காகவும், 1வது எதிரி நிறுவனத்தின் சார்பிலும், சிறைத்தண்டனையை அனுபவிக்கவும், அபராதத்தொகை செலுத்த வேண்டுமென்றும் இந்நீதிமன்றத்தில் 08.02.2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மொத்த அபராதத் தொகையான ரூ.40,000/- எதிரிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.


ஓம்./- T.V.மணி

தலைமை நீதித்துறை நடுவர் 

திருவள்ளூர்

//உண்மை நகல்//

சிரஸ்ததார்

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருவள்ளூர்.