சென்னை:
செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது.குறிப்பாக, வரவு - செலவு கணக்கை போலியாக காட்டி ரூ.435 கோடி வைத்திருந்தது தெரியவந்தது. அதேபோல், மருத்துவச்சீட்டு வழங்குவதிலும் கணக்கில் காட்டாத வகையில் பணம் வசூல் செய்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனிடையே கணக்கில் காட்டப்படாத ரூ.23 கோடி ரொக்கமாக வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.