சென்னை, அக்.3- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் 244 கோடியில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ல் பெய்த கனமழை சேதமதிப்பு சுமார் 15 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று தமிழக அரசு தனது அறிக்கை யில் தெரிவித்து இருப்பதாக கூறப்படு கிறது. இந்நிலையில், மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறியும் பணிகளில் தமிழக பொதுப்பணித்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை மாநகராட்சியில் 306 இடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்கள் மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில், மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், 2400 கோடி செலவில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 100 கோடி செலவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் வெள்ளத்தடுப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.தற்போது, இரண்டாவது கட்டமாக வெள்ளத்தடுப்பு பணி மேற்கொள்ள 244 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. 14 கோடி செலவில் தாம்பரம்- முடிச்சூர் சாலையில் மூடுகால்வாய், 2.20 கோடியில் ஊரப்பாக்கத்தில் ஆரம்பித்து மண்ணிவாக்கம் கால்வாய், 16 கோடியில் வரதராஜ புரம், சோமங்கலத்தில் தடுப்பணை, 17 கோடியில் கீழ்க்கட்டளையில் வெள்ள உபரி நீர் கால்வாய், 55 கோடியில் கீழ் பரவனாறு அருவா முக்கில் வெள்ள நீர் உபரி நீர் கால்வாய், 7 கோடியில் புதுமா விலங்கல், 9.70 கோடியில் ரெட்டி யார் பாளையத்தில் தடுப்பணை மற்றும் தடுப்புச்சுவர், ரெகு லேட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. 4 கோடியில் தடுப்பணைக்கு பதிலாக தடுப்புச் சுவர் உள்ளிட்ட பல பணிகள் 244 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விரை வில் டெண்டர் விடப்படுகிறது. தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இப்பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
60 கோடியில் புதிய நீர்த்தேக்கம்
ஒரத்தூர்-ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. இந்த புதிய நீர்த்தேக்கத்தை இணைப்பதன் மூலம் 0.5 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக சேமித்து வைக்கமுடியும். இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு புதிய நீர் தேக்கம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 2015ல் பாதிக்கப்பட்ட ஆதனூர் பகுதிகள் இனி வரும் மழைக்காலத்தில் பாதுகாக்கப்ப டும். அதே சமயம் மழைநீர் வீணாக கடலில் சென்று கலப்பது தடுக்கப்ப டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.