சென்னை:
உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித் துள்ளது.உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு வெளியிட்டார். அதில், மத்திய அரசின் நிதிஉதவியின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் சென்னைஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.நிதி ஆதரவு, உள்கட்டமைப்பு, விழிப்புணர்வு, ஆலோசனை, கண்டுபிடிப்புகளுக்கான ஆதரவு, தொழில்முனைவோர் மேம்பாடு, கற்றல் முறை, வணிகமயமாக்கல் உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து மத்திய கல்வி அமைச்சகம்,ஏஐசிடிஇ ஆகியவை இணைந்து இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளன.அதில், மாநில அரசுகளின் பல்கலைக்கழக பட்டியலில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும், மாநில அரசு கல்லூரிகளின் பட்டியலில் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களில் ஒடிஸா மாநிலத்தில் இயங்கி வரும் கலிங்கா தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.