tamilnadu

img

சாத்தான்குளம் காவல் ஆய்வாளருடன் தொடர்பா? கடம்பூர் ராஜூ விளக்கம்

சென்னை:
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத் தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட காவலர் முத்துராஜ் விளாத்திகுளத்தில் வெள்ளியன்று இரவு கைது செய்யப்பட்டு அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.சாத்தான்குளம் சம்பவத்தில் இன்ஸ் பெக்டர் ஸ்ரீதரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தபோது, அவர் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறி மிரட்டியதாக தகவல் வெளியானது. அந்த அமைச்சர் தூத்துக்குடி மாவட் டத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ என்றும் பேசப்பட்டது.  
இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுத்துள்ளார். சாத்தான் குளம் வழக்கில் கைதான ஸ்ரீதருக்கும் எனக் கும் எந்த தொடர்பும் இல்லை, என்னையும் ஆய்வாளர் ஸ்ரீதரையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என்று அமைச்சர் கூறி உள்ளார்.