சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் மு.சுப்பிர மணியனின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவர் பணிஓய்வு பெற அனும திக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் 2-வது நாளாக அரசு ஊழியர் சங்க மாநிலத் துணை தலைவர் ஆ.செல்வம் தலைமையில் நடை பெற்றது. இப்போராட்டத்தை வாழ்த்தி பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், “அதிமுக மாவட்டச் செய லாளர்கள், அமைச்சர்கள், சட்ட மன்ற, மக்களவை, மாநிலங்க ளவை உறுப்பினர்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் தண்ணீர் பஞ்சம் பற்றி பேசுவார்கள் என்று எண்ணினால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கட்சிக்காரர்களுக்கு வாய்ப் பூட்டு போடப்பட்டு ள்ளது. எதையும் செய்ய முடி யாதது மட்டுமல்ல எதையும் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்”என்றார். நாடே தமிழகத்தை திரும்பிப்பார்க்கும் போராட்டத்தை நடத்தியவர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர். இதனால் தலைமைச் செயலா ளர் உட்பட பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட தையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிர மணியன் மக்கள் போராளி, ஊழியர்களின் நலன்களுக் காகவே தன்னை அர்ப் பணித்துக்கொண்டவர், அவர் பணி ஓய்வு பெற்றதும் எந்த பலன்களையும் அனுபவிக்க க்கூடாது என்று மாநில அரசு அவருக்கு கிடைக்க வேண்டிய பென்சன் உள்ளிட்ட பணப்பயன் மீது அரசு கைவைக்க முயல்கி றது. தவறே செய்யக்கூடாது என்று சொல்லும் தலைவர் சுப்பிரமணி தவறு செய்ததாக பொய் குற்றச்சாட்டை தண்டிப்பது என்ன நியாயம். அவர் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு ஊழியர் சங்கத்தினர் மீது இது போன்ற நடவடிக்கை தொடருமானால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பென்சன் வாங்க முடியாத நிலை ஏற்படும் என அ.சவுந்த ரராசன் எச்சரித்தார். மாநில அரசின் பழிவாங்கலுக்குள்ளாக்கப்பட்ட மு.சுப்பிர மணியின் போராட்ட வரலாற்றை பாராட்டி பேசிய தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன்,“ அரசு ஊழியர்களை மாநில அரசு பழிவாங்குவது இது ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதா முதல மைச்சராக இருந்த போதே ஏகப்பட்ட அடக்குமுறைகளை ஏவினார். அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். அவரின் சர்வாதிகாரத்தையே களம் கண்டு தவிடு பொடி யாக்கியவர்கள் நாங்கள்” என்றார். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலா ளர்கள் ஆர்.பன்னீர் செல்வம், சி.ராஜ்குமார், ஏ.பெரியசாமி, பொருளாளர் கே.தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.