சென்னை,மே 2-நாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடை பெற்றன. 12 ஆம் வகுப்பு தேர்வில், 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 31 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளங்களான, உளெந.நஒயஅசநளரடவள.நேவ, சநளரடவள.படிஎ.in ஆகிய இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். cbse.examresults.net, results.gov.in போன்ற இணையதளங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம்.கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 26 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 29 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.