சென்னை, மே 15-பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது. வருவாய்த் துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால், பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிடத் தேவையில்லை. சாதி என்ற பிரிவில் வருவாய்த்துறை ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடவும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.