tamilnadu

img

71 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

சென்னை:
அங்கீகாரம் இல்லாத 71 கல்வியியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர வேண்டாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 731 கல்வியியல் பிஎட், எம்எட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 58 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் பெறாத 13 கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த 71 கல்வியியல் கல்லூரிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிட்டு அவற்றில்  உள்ளிட்ட படிப்புகளில் புதிதாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. மாணவர்கள் யாரும் மீறி சேர்ந்தால் அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.