சென்னை, ஜுன் 13 - சங்கம் அமைத்தால் பழிவாங்குவது என்ற நடவடிக்கைக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப் படும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். தொழிற்சங்கம் அமைத்தற்காக திருப்பெரும்புதூர் அஸாகி தொழிற் சாலையில் 25பேர் பணி நீக்கம், மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் 99 பேர் பணி நீக்கம், தாம்பரம் மெப்ஸ் வெஞ்சர் லைட் கம்பெனியில் 20 பேர் வேலை நீக்கம், 5 பேர் தற்காலிக நீக்கம், 22 பேர் ஊர்மாற்றம், பிஎம்எஸ் என்ஜினி யரிங் கம்பெனியில் 18 பேர் பணிநீக்கம், 8பேர் பணியிடை நீக்கம், சென்னை மெட்ரோ ரயிலில் 7 பேர் பணி நீக்கம் என தொடர்ச்சியாக தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். தொழிற்சங்கம் அமைத்தால் பழிவாங்கப்படுவது என்ற நிலையை, தமிழக அரசு தலையிட்டு தடுக்க வலி யுறுத்தி வியாழனன்று (ஜூன் 13) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சிஐடியு சார்பில்ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது செய்தியாளர்க ளிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது: தொழிற்சங்கம் அமைத்தால் கொத்துக்கொத்தாக பழிவாங்கப் படுகிறார்கள். வெளிமாநிலங்களுக்கு பணிமாற்றம் செய்கிறார்கள். ஊதிய உயர்வு வெட்டப்படுகிறது. அரசாங்கம் மற்றும் தொழிலாளர் துறையிடம் முறையிட்டால் நியாயமான முறையில் தலையீடு செய்வதில்லை. மெட்ரோ ரயிலில் கூட சட்ட உரிமை கள் அமலாக்கப்படுவதில்லை. நிலை யாணை, தொழிற்தகராறு சட்டம் போன்றவை மெட்ரோ ரயில் நிர்வா கத்திற்கு பொருந்தும் என்பதை தெரியா தது போல் ஐஏஎஸ் அதிகாரி நடந்து கொள்கிறார். தொழிற்சங்கத் தலை வர்கள் பேசக்கூடாது, துண்டறிக்கை, அறிக்கை வெளியிடக்கூடாது என்று சிவில் நீதிமன்றத்தில் வழக்கு போடு கிறார்கள். தொழிலாளிகள் மீது கிரிமினல் வழக்கு போடுகிறார்கள். டான்சன் என்ற நிறுவனம் மூடப்படு கிறது. தொழிலாளர்கள் வேலை இழக் கின்றனர். அதே நிறுவனம் மறுபக்கத் தில் வேறு பெயரில் தொழிற்சாலை நடத்துகிறது. ஹனிவல் கம்பெனி மூடப் பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு போட்டால் தொழிலாளர் துறை, கொடுப் பதை வாங்கிக்கொண்டு செல்லுங்கள் என்கிறது. இந்துஸ்தான் மோட்டார் கம்பெனியை வேறுஒரு நிறுவனத்திற்கு விற்றுவிடுகிறார்கள். தொழிலாளர் துறையிடம் முறையிட்டால் விஆர்எஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறது. பழிவாங்கலுக்கு எதிராக 80 நாட்களாக அஸாகி நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இவற்றின் மீது அரசு உரிய தலை யீட்டை செய்யாமல், முதலாளிகளுக்கு துணைபோகிறது. இந்தப்போராட்டத்தி ற்கு பிறகாவது பழிவாங்கலை நிறுத்திக் கொண்டு, வழக்குகளை திரும்ப பெறுவது, மீண்டும் பணி வழங்குவது என்ற நிலைக்கு வர வேண்டும். சங்க உரிமையை அங்கீகரிக்க மறுத்தால், அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தப்போராட்டத்திற்கு சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பார்த்தசாரதி (லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன்), தயா னந்தம் (அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம்), டி.டெய்சி (அங்கன் வாடி ஊழியர் சங்கம்), எஸ்.எஸ்.சுப்பிர மணியன் (மின்ஊழியர் மத்திய அமைப்பு), குப்புசாமி (சிஐடியு வட சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.