tamilnadu

img

பணியாளருக்கான நேர்காணலுக்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அழைப்பு... சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டினை முறையாக நடைமுறைப்படுத்துக... ஒன்றிய அரசுக்கு தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தல்....

மதுரை:
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இட ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு முறையாக  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தலித் விடுதலைஇயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியளவில் சுமார் 12 இந்தியதொழில்நுட்ப நிறுவனம் (INDIAN INSTITUTE OF TECHNOLOGY)இயங்கி வருகிறது அதில் தமிழகத்தில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை ஐஐடியில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், துணைப்  பேராசிரியர் ஆகியபணியிடங்களுக்கு கடந்த  2018மற்றும் 2019 ஆம் கல்வியாண்டில் முறையாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி  மற்றும் எஸ்.டி, ஓபிசி ஆகிய பணியிடங் களுக்கு தகுதியுடைய பல நபர்கள் சென்னை ஐஐடி.க்கு விண்ணப் பித்துள்ளனர்.

இதில்,2020 ஆம் கல்வியாண்டில் சென்னை ஐஐடியில் நடைபெற்ற பணியாளருக்கான நேர்காணலில் தாழ்த்தப்பட்ட (SC) மற்றும் பழங்குடியின வகுப்பினர்(ST),இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)ஆகிய பணியிடங்களுக்கான நேர்காணலில் ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் அணைவரையும் நேர்காணலுக்கு அழைக்காமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்துள்ளனர். அதனடிப்படையில் எஸ்.சி மற்றும் எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான காலியிடங்களுக்கு உரிய நியமனங்களை நியமிக்காமல்,திட்டமிட்டு மோசடியாக பொது இடங்களுக்கான (O.C) இட ஒதுக்கீட்டில் மோசடியாக நியமனங்கள் செய்துள்ளனர்.இதனால் எஸ்.சி,எஸ்.டி, ஓபிசிக்கு தகுதிவாய்ந்த பணியாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, சென்னை ஐஐடியில் தற்சமயம் பேராசிரியர், இணைப்பேராசிரியர், துணைப் பேராசிரியர் ஆகிய நியமனங்களில் எஸ்.சி மற்றும் எஸ்.டி.,ஓபிசிக்கான பணியிடங்களில் நடைபெற்ற பணி மோசடிகள் குறித்து விசாரிக்க வேண்டும். இதில் மோசடியாக நியமன‌ம் செய்யப்பட்டுள்ள பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு முறையாக சென்னை ஐஐடியில் எஸ்.சி.,எஸ்.டி மற்றும் ஓபிசிக்கான பணி நியமனங்களை ஒன்றிய அரசு பூர்த்தி செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.