tamilnadu

img

சிபிஎம் முயற்சியால் ஏரியைப் பாதுகாத்த ஊர் மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் கண்டகட்சிபுரம் வட்டம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியானது, பெஞ்சால் பெருமழையில் நிரம்பி கரை உடையும் நிலை ஏற்பட்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் கரையைப் பலப்படுத்த 1.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜா என்பவர் ஒப்பந்த முறையில் ஏலம் எடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் இரண்டு மதகு மற்றும் கரையை சீர்படுத்தும் பணிகளை முடித்திருந்தார்.  ஆனால், பெஞ்சால் புயல் கனமழையில் இந்த ஏரி நிறைந்து கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் ஊர் பொதுமக்களும் இணைந்து ஐநூறு மண் மூட்டைகளை கொண்டு சென்று கரையை பலப்படுத்தி ஏரிக்கரை உடையாமல் பாதுகாத்தனர். வீரபாண்டி பெரிய ஏரியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்மாறன் தலைமையிலான சிபிஎம் தோழர்களுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.