tamilnadu

img

ரூ.54 கோடியில் கட்டப்பட்ட காளவாசல் மேம்பாலம் திறப்பு

சென்னை:
 தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி மு. பழனிசாமி மதுரை மாநகர் காளவாசல் சந்திப்பில் 54 கோடியே  7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம் பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

 மேலும், நாமக்கல்,  திருப்பத்தூர், புதுக் கோட்டை, சிவகங்கை, அரியலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில்  211 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள், ரயில்வே கடவிற்கு மாற்றாக 2 சாலை மேம்பாலங்கள், 2 சாலைப் பணிகள், பல்வழி பரிமாற்ற மேம்பாலம், வரையறுக் கப்பட்ட சுரங்கப்பாதை  மற்றும் சென்னை பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றையும் திங்களன்று  அவர் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், சென்னை வெளிவட்டச் சாலை  நசரத்பேட்டையில்  42 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வழி பரிமாற்ற மேம்பாலம்; சென்னை மாவட்டம், கிண்டியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 17 கோடியே  66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையக் கட்டடம் என மொத்தம் 265 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், சாலைப் பணிகள், வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்,