tamilnadu

img

விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் மூத்த விவசாயி மீது பாஜக தாக்குதல்

காஞ்சிபுரம்,ஆக.30 விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் முன்னோடி விவசாயியை பாஜகவினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட விவ சாயிகளின் குறை தீர் கூட்டம் மாதந்  தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கட்டிடத்தில் நடைபெறும். ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டம் வெள்ளியன்று (ஆக.30) மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலை மையில் நடைபெற்றது.  கூட்டத்தைத் துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வேறு பணி காரண மாகக் கூட்டத்தின் பாதியில் செல்ல நேரிட்டதால் மாவட்ட திட்ட முகமை இயக்குநர் சிறீதர் தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனைத் தொடர்ந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லதாபானுமதி கடந்த மாதத்தில் விவசாயிகள் கொடுத்த மனுவின் மீது எடுக்கப்  பட்ட  நடவடிக்கைகள் குறித்துப் பேசி யவுடன் விவசாயிகள் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் தொடர்ந்து பாஜகவின் மாவட்டப்  பொறுப்பாளர் குமாரசாமி பேச வேண்டும் எனக் குறுக்கீடு செய்தபடி  இருந்தார். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முன்னோடி  விவசாயி கிருஷ்ணன் என்பவரை குமாரசாமி ஒருமையில் பேசினார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. முன்னோடி விவ சாயியை நோக்கி வேகமாக வந்த  குமாரசாமி கிருஷ்ணனின் கையை பிடித்து முறுக்கி தாக்க முற்பட்டார். அருகிலிருந்த விவசாயிகள் தடுத்து இருவரையும் சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக பொறுப்பாளர் குமாரசாமி மன்னிப்பு கேட்கும் வரை கூட்டத்தை  நடத்த விடமாட்டோம் என விவசாயி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் அறை மணி நேரத்திற்கும் மேலா கக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  குமாரசாமி மன்னிப்பு கேட்டதனைத் தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.