திரிபுரா மாநிலம் தாம்நகரில் மகளிர் ஆணையத் தலைவர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம் தாம்நகரில் மகளிர் ஆணையத் தலைவர் பர்னாலி கோஸ்வாமி மீது கவுன்சிலர்கள் உட்பட பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். பாஜகவினர் பர்னாலி கோஸ்வாமியை தாக்கி அவரது உடையைக் கிழித்துள்ளனர். மேலும் அவரது உதவியாளர் ஒருவரையும் தாக்கியுள்ளனர். இதை அடுத்து, காவல் நிலையத்தில் பர்னாலி கோஸ்வாமி புகார் அளித்துள்ளார். திரிபுராவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து, மகளிர் ஆணையத் தலைவருக்கே பாதுகாப்பாக இல்லாவிட்டால், சாமானிய பெண்களின் நிலை என்ன என்று சிபிஎம் மத்திய குழு கேள்வி எழுப்பி உள்ளது.