tamilnadu

img

பிகில் திரைப்படம்: வழக்கு தொடர அனுமதி

சென்னை:
பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதியளித்துள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும் எனவே படத்துக்கு தடை விதிக்கக் கோரியும் உதவி இயக்குனர் செல்வா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதவி இயக்குநர் செல்வா, பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை  கோரி வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.  மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் மனுதாரரை அறிவுறுத்தியுள்ளது.காப்புரிமை கோரி வழக்கு தொடந்தால்  பிகில் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.