சென்னை:
தமிழ்நாட்டில் உடற் பயிற்சிக் கூடங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் இயங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித் துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங் கத்தின் சார்பில் அதன் நிர் வாகிகள், தமிழ்நாட்டில் உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளார். அதில், மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங் களை திறக்க ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் அனுமதி அளித் துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற் பயிற்சிக் கூடங்கள் 50 வயது, அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப் படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என, அந்த அரசாணையில் குறிப் பிடப்பட்டுள்ளது.