tamilnadu

img

3வது மொழி விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்: சுப.வீரபாண்டியன்

சென்னை, ஜூன் 21 3வது மொழி விருப்பத்தின்  அடிப்படையில் இருக்க வேண்டும் என்று திராவிட தமி ழர் பேரவை தலைவர் சுப.வீர பாண்டியன் கூறினார்.  இந்திய இறையாண்மைக்கு எதிராக மத்திய பாஜக அர சால் கொண்டு வரப்பட்ட  புதிய  கல்விக்கொள்கையை கண்டித்து தமுஎகச வட சென்னை-தென் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் வியாழனன்று (ஜூன்20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திராவிடகழக தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்  புதிய கல்விக்கொள்கையை ஒட்டுமொத்தமாக நிராக ரிக்கவேண்டுமே ஒழிய  திருத்து வதற்கு இதில் ஒன்றுமே  இல்லை. மும்மொழிக்கொள் கையை பேசும் அரசு இந்த வரை வுக்கல்விக்கொள்கையை கூட  இருமொழியில் தான் கொண்டு வந்தது. கல்வியை பொதுப்பட்டி லிருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும். பொதுப்பட்டில் என்பது ஏமாற்று வேலை ஆகவே அதனை ஒழிக்க வேண்டும். தாய்மொழி, ஆங்கி லம், இந்திய மொழிகளில் ஏதே னும் ஒன்று என்று சொல்லாமல்  மூன்றாவதாக இந்தி தான் என்பதை எங்களால் ஏற்க முடி யாது. மூன்றாவது மொழி எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும். உலகத்தின்  அறிவியல் தொழில் நுட்பமொழி யாக ஆங்கிலம் இருப்பதால் தமிழ், ஆங்கிலம் போதும். இந்த  புதிய கல்விக்கொள்கை ஜன நாயத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிரானது என்றார்.

பேராசிரியர் ஷாஜாகனி
தமுமுக துணைப்பொதுச் செயலாளர் பேராசிரியர் காஜா கனி பேசுகையில், பண்பாட்டு படையெடுப்பை நிகழ்த்த இந்த கல்வி வரைவுக்கொள்கை முயல்கிறது. திருக்குறளை ஏற்றுக்கொண்டவர் மநுநீதியை எப்படி ஏற்றுக்கொள்வர். மனி தர்களை ஒற்றிணைக்காத சமஸ்கிருதத்தை முன்னி றுத்துவதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். சூத்திரனுக்கு கல்வியை கொடுக்காதே என்று  சொன்ன மநுநீதியின் மறுவடி வம் தான் இந்த புதிய கல்விக் கொள்கை என்றார்.

வசந்திதேவி
முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி பேசுகையில்  மத்திய அரசின் கல்விக் கொள்கை அதிகார குவியலை  ஊக்குவிக்கிறது. புதிய கல்விக் கொள்கையில் ஜனநாயகமாக இருப்பதுபோன்று வெளித் தோற்றம் இருக்கிறது. இதில் ஒளிந்திருக்கும் குறைகள் ஏராளமாக உள்ளன. மேற்கு ஐரோப்பியா, அமெரிக்கா, கன டாவில் அரசுக்கல்வி ஊக்கு விக்கப்படுகிறது. சமத்துவக் கல்வியை விடுத்து ஏற்றத் தாழ்வை உருவாக்கும் முறையை இந்திய அரசு செய்கிறது என்று சாடினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா பேசுகை யில், குழந்தையின் கல்வி உரிமை, குடிமக்களின் மொழி  உரிமை இந்த புதியக்கல்விக் கொள்கையால் மீறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பாஜக வின்  கூடுதல் பலத்தால் தான் இந்த  ஜனநாயக அத்துமீறலை பிரதமர் மோடி செய்துவருகிறார். மாதர் சங்கம் சார்பில் கல்வி குறித்து கொள்ளிமலையில் ஓர்  ஆய்வு செய்தபோது 40 குடும் பங்களில் 4 பேர் மட்டுமே படித்த வர்களாக இருக்கும் அவலம் தெரியவந்தது.இந்த புதிய கல்விக்கொள்கையால் பெண்  கள், குழந்தைகளின் கல்வி உரிமை மறுதலிக்கும் அபாயம்  உள்ளது இதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். நாட்டில் உள்ள  அனைத்து அறிவுஜீவிகள், மாண வர்கள், அரசியல்கட்சியினர், சமூக செயல்பாட்டார்கள் பங்கேற்கும் போராட்டமாக இது மாறவேண்டும் என்றார்.

நிருபன்
இந்திய மாணவர் சங்கம்  மாநிலக்குழு உறுப்பினர் நிருபன் பேசுகையில், ஆர்எஸ்எஸ்ன் வளர்ப்புக்குழந்தையாக செயல்  படும் பிரதமர் மோடியின் புதிய  தேசிய கல்விக்கொள்கை வளர்ச்சிக்கு எதிரானது. இது  புதிய சமூகத்தை முன்னேற விடாமல் பின்னுக்கு இழுக்கும் நடவடிக்கையாகும். கல்வியை நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரில் வியாபாரமாக மாற்று கிறது. நீட் தேர்வின் மூலம் இது வரை 11 உயிர்களை தற்கொலை யால் இழந்துள்ளோம். பணம் படைத்தவருக்கு மட்டும் தான்  கல்வி என்ற நிலை ஏற்பட்டுள் ளது என்று வேதனை தெரி வித்தார். தமுஎகச தென் சென்னை மாவட்டத்தலைவர் சி.எம்.குமார்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்வியாளர் தாவூத்மியாகான், தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் பொதுச் செயலாளர் மரு.ரெக்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலக்குழு உறுப்பினர் செந் தமிழ்ச்செல்வம், வழக்கறிஞர் சிகரம் செந்தில் நாதன், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊடகபிரிவு தலைவர் வி.எஸ்.முகமது அமீன், திராவிடர் மாண வர் கழக மாநிலத் தலைவர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.  இந்நிகழ்வை மூத்த பத்திரிகை யாளர் அ.குமரேசன் தொகுத்து  வழங்கினார். நிறைவாக வட சென்னை மாவட்டச்செயலாளர் தி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.