10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி இறுதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும், 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழி வகுப்பே சிறந்தது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை அதிகரித்துவரும் நிலையில் நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
இணைய வழி மூலம் வகுப்பு எடுக்கும் பட்சத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனத் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.