சென்னை, பிப். 4 - ஓட்டுநர் அரிச்சந்திரன் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ் வாயன்று (பிப்.4) சென்னை யில் ஆட்டோ ஒட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட னர். மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எல்.அரிச் சந்திரனை கடந்த 28 ஆம் தேதி போலீசார் வாகன சோதனையின் போது கடுமையாக தாக்கியுள்ள னர். இதில் மன உளைச் சலுக்கு உள்ளான அரிச்சந்தி ரன் அருகில் இருந்த மின் சாரக் கம்பியை பிடித்ததால் உடல் கருகியது. அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த அவர், பிப்.2 அன்று மரணமடைந் தார். இந்நிலையில், அரிச்சந்தி ரன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தின் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த மரணத்திற்கு காரணமான காவலர் காசிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் உயர்த்தப்பட்ட அபராதத் தொகையிலிருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்திற்கு ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ. முகமது அனீபா தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத் தலைவர் வி.குமார், பொதுச் செய லாளர் எம்.சிவாஜி, செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியம், சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன், ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலை வர் ஏ.எல்.மனோகரன், செய லாளர் ஜெயகோபால், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்க துணைப்பொதுச் செய லாளர் பக்கிரி உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டு நர்கள் அரிச்சந்திரன் குடும்ப நிதியாக 16 ஆயிரம் ரூபாயை ஆட்டோ சங்க மதுரை மாவட்டச் செயலாளர் கண்ணனிடம் வழங்கினர்.