நாகர்கோவில், ஜூன் 24- மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொ ண்டுவரக்கோரியும், 6 மாதங்க ளுக்கு வாகன இன்சூரன்ஸை ரத்து செய்யவும், வங்கிக் கடன் வட்டியை தள்ளுபடிச் செய்ய வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் கன்னியா குமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சர்வதேச சந்தையில் கச்சா விலை குறைந்திருந்தாலும் மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தொ டர்ந்து உயர்த்தி வருகிறது. கார்ப்ப ரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கு இந்த விலையேற்றம் உதவி வருகிறது. மற்றொருபுறம் இது வாகன தொழிலை நம்பி யிருக்கும் லட்சக்கணக்கான மக்க ளையும், அன்றாடம் தங்களது சொந்த வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் சாதாரண மக்கள் அனை வரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியி ருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து அனைத்துப் பகுதி மக்களையும் துன்பத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கன்னியா குமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவ தும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாட்டர் டாங்க் சாலை, பிஎஸ்என் எல் அலுவ லகம், வேப்ப மூடு பூங்கா சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம் நிலை யம், கோட்டார், சிவன் கோயில் தெரு, வடசேரி, அறுகுவிளை, ஆரல்வா ய்மொழி, திட்டுவிளை, துவரங்காடு, ராஜாவூர், ஜேம்ஸ்டவுண்,பறக்கை,கள்ளியங்காடு, சுங்கான்கடை, தக்கலை, குருந்தன்கோடு, பரசேரி குளச்சல், கருங்கல், தெருவுக்கடை, மார்த்தாண்டம், படந்தாலுமூடு,மேல்புறம்,மங்காட்டுக்கடை, குலசேகரம், அருமனை, திருவிதாங்கோடு, நெய்யூர், சுவாமியார் மடம் உட்பட 40 பகுதிகளில் நடைபெற்றது. மேல்புறம் பகுதியில் ஆட்டோவை கயிற்றினால் கட்டி இழுத்து ஆட்டோ தொழிலாளர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கோரியும், 6 மாதங்களுக்கு வாகன இன்சூரன்ஸை ரத்து செய்ய வும், வங்கிக் கடன் வட்டியை தள்ளு படி செய்ய வலியுறுத்தியும் முழக்க மிட்டனர். இதில், மாவட்ட தலைவர் மரி யஸ்டீபன், செயலாளர் பொன்.சோப னராஜ், துணைத்தலைவர் எஸ்.அந்தோணி, பொருளாளர் மோகன், நிர்வாகிகள் கண்ணன், சுகுமாரன், வில்சன், சுந்தர்ராஜ், பிரேம்ஆனந்த், பரமசிவன், சகாய ஆன்றணி, சிங்கா ரன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.