பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை. பலி எண்ணிக்கையைக் கூட குறைத்துக் காட்டி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மறுபுறத்தில் வாழ்விழந்து தவிக்கும் மக்களுக்கு போதுமான நிவாரணம் அளிப்பது குறித்தும் கவலைப்பட வில்லை. கொரோனா காலத்திலும் அனைத்து மட்டங்களிலும் ஊழல் புரிவது ஒன்றே முழுமையான பணியாக அதிமுக அரசு செய்து வருகிறது. மறுபுறம் தமிழகத்தில் பெண்கள் - குழந்தைகள் மீதான தாக்குதல், தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்துள்ளன.
மோடி அரசு அராஜகம்
கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிதி அளிக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாறாக, தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கை களை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டுள்ளது. ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, விவசாயத்தைகார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கான அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது. மின்சார சலுகையை பறிக்கும் மின்திருத்தமசோதா, கூட்டுறவு நிறுவனங்களை ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றியுள்ளது, இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடையின்றி சூறையாட ஒப்படைப்பது, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை மாற்றியுள்ளது, ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநில அரசுகளுக்கு தர மறுப்பது, கல்வியை வணிகமயமாக்கும் மற்றும் வகுப்புமயமாக்குகிற புதிய கல்விக் கொள்கையை திணிப்பது, தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது, போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமை, பணி நிரந்தரம் உள்ளிட்டசட்டங்களை திருத்துவது, பேச்சுரிமை - எழுத்துரிமையை பறிப்பது, அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அராஜகமான நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகஅரசு குரல் கொடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருப்பது தமிழக மக்கள் மீது இவர்களுக்குள்ள அக்கறையற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் மதப் பதற்றத்தை உருவாக்குகின்றன. ஊடகங்களை குறிவைத்து தாக்குவது, மாற்றுக் கருத்துள்ளஊடகவியலாளர்களை மிரட்டுவது, இதன் மூலம் மொத்த ஊடகத்தையும் தன்கைப்பாவையாக மாற்ற முனைகிறது இந்துத்துவா கூட்டம். தமிழக அரசின் காவல்துறையும் பாஜகவிற்கு அடிபணிந்துசெல்லும் நிலையே காணப்படுகிறது.தொடர் பொதுமுடக்கத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் வாங்க வேண்டுமென்பதால் சாதாரண குடும்ப நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள முடியாமல் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர். இ-பாஸ் வழங்குவதிலும் ஊழல் - முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்துசெய்திகள் வருகின்றன. பொதுப் போக்குவரத்து தொடர்ந்து முடக்கப்படுவ தால் நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட வில்லை என்பதோடு தொழிலாளர்கள், தின உழைப்பாளிகள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
மாபெரும் மக்கள் இயக்கம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இம்மோசமான நிலை குறித்து அனைத்துக்கட்சிகளை கூட்டி கலந்தாலோசிப்பதற்கும் தமிழக அரசு தயாராக இல்லை. மக்களிடம் கருத்து கேட்டு அவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை.இந்த பின்னணியில் அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20-26 வரை மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டுமென கட்சியின் மத்தியக்குழு அறைகூவல்விடுத்துள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் வீடு, வீடான பிரச்சாரமும், ஆகஸ்ட் 25 - 26 தேதிகளில் மாபெரும் மக்கள் இயக்கமும் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் இப்போராட்ட த்திற்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்து கலந்து கொள்ள வேண்டுமெனவும், கட்சிஅணிகள் முழுமையாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் மாநிலக்குழு அறை
கூவல் விடுக்கிறது.