tamilnadu

கலைவாணர் அரங்கில் இன்று சட்டமன்ற கூட்டம்

சென்னை:
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் பலத்த பாதுகாப்புடன் தமிழக சட்டப்பேரவை திங்களன்று (செப்.14 )காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கூடுகிறது.

வழக்கமாக சென்னை கோட்டையில்தான் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அங்கு எம்.எல். ஏ.க்கள் இடைவெளி விட்டு அமர போதிய வசதி இல்லாத காரணத்தால் கலைவாணர் அரங்கில் 3-வது மாடியில் சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

ஏ.சி., கிடையாது
குளிர்சாதன வசதிகளுடன் இருந்த இந்த 3-வது மாடியில் தற் போது ஏ.சி. வசதியை நீக்கி விட்டு மின்விசிறிகள் ஏராளமாக பொறுத் தப்பட்டுள்ளது. ஜன்னல் வசதிகளும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.திருமண மண்டபங்களில் நீண்ட மேசை போடப்படுவது போல் இங்கும் அகலமான மேசைகள் போடப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்கள் அமருவதற்கு தனித்தனி இருக்கைகளும் இடைவெளி விட்டு போடப் பட்டுள்ளன.பேரவையில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் உருவப் படங்களும் இந்த  வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.பாரம்பரிய இருக்கைபாரம்பரியம்மிக்க சபாநாயகர் இருக்கையும் கொண்டு வரப் பட்டுள்ளது.இந்த கூட்ட அரங்கில் மொத்தம் 1,200 பேர் அமரக்கூடிய அளவுக்கு இடம் உள்ளது. ஆனாலும் தற்போது கொரோனா காலம் என்பதால் 400 பேர்கள் இந்த தளத்திற்கு வந்து செல்ல அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது.234 எம்.எல்.ஏ.க்களில் ஜெ.அன்பழகன், கே.பி.பி. சாமி, குடியாத்தம் காத்தவராயன் ஆகியோர் மரணமடைந்து விட்டதால் 231 எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க முடியும்.

எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், திருச்செங்கோடு  பொன்.சரஸ்வதி, செய்யாறு  தூசிமோகன் ஆகிய 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப் பட்டுள்ளதால் இன்றைய கூட்டத்தில்  பங்கேற்க மாட்டார்கள். இதேபோல், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால் இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார். முதலமைச்சர், துணை முதலமைச்சர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட 200 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத் தொடரில் பங்கேற்பார்கள்.

பத்திரிகையாளர்கள்
இதுதவிர பத்திரிகையாளர்கள் 54 பேர், சட்டப்பேரவை ஊழியர்கள் 25 பேர், அவை காவலர்கள் 20 பேர் மட்டுமே சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் 3-வது மாடியில் அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இவர் களுக்கு சுகாதாரத்துறை சார்பில் சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.கொரோனா பரிசோதனை மேற் கொள்ளாத ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கீழ் தளம் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்டப்பேரவை  கூட்டம் தொடங்கியதையொட்டி கலைவாணர் அரங் கத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.