tamilnadu

img

பேரவை நூற்றாண்டு-கருணாநிதி படத்திறப்பு விழா... குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் வழங்கிய அப்பாவு....

சென்னை,:
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற் றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழா அழைப்பிதழை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேரில் வழங்கினார்.
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு மற்றும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ் விழாவில் கலந்து கொள்ளவுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, தமிழக சட்டப்பேரவையின் பேரவைத் தலைவர் மு.அப்பாவு சனிக்கிழ மையன்று (ஜூலை 31) தில்லியில் சென்று அழைப்பிதழை வழங்கி விழாவுக்கு அழைத்தார்.

அதன்பின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, தென் மாநிலங்களுக்குத் தாய் வீடாக, சென்னையைத் தலைநகராகக் கொண்டு, மதராஸ் பிரெசிடன்ஸி என, கேரளா, தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, கர் நாடகா, ஒடிசாவின் ஒருபகுதி அனைத்தும் இணைந்த ஒரு சட்டப்பேரவையாக, 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி ‘கனாட் கோமகனால்’ முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கி வைக்கப் பட்டு, 100 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, தமிழக முதல்வர், நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என் பதற்காக, இந்தியக் குடியரசுத் தலைவரை அழைத்தார். அவரும் வர சம்மதித்துள்ளார்.அந்த அடிப்படையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமும், 13 முறை சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்று, 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பேரவையில் பணியாற்றி, 5 முறை தமிழக முதல்வராகப் பணியாற்றி, சாமானிய ஏழை, எளிய மக்களுக்காக உழைத்த மறைந்த முதுபெரும் தலைவர் கருணாநிதியின் முழு திருவுருவப் படத் தையும் திறந்து வைப்பதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல், தலைமையேற்று நடத்துவதற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்தும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற் கும் சிறப்பு விருந்தினர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அழைப்பது மரபு. அதன் அடிப்படையில், அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்தேன். குடியரசுத் தலைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்தார். தமிழகத்தின் கலாச்சாரம், வரலாறு, வாழ்வாதாரம் ஆகியவை இந்தியா முழுமைக்கும் தேவை எனக் கருதி “தி திராவிடியன் மாடல்” புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கினேன்.இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.