சென்னை,ஜூலை 11- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளி யிட்டதும் திமுக உறுப்பினர் ஆஸ்டின் எழுந்து 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ‘ஒழுங்கு பிரச்சனை’ (பாயிண்ட் ஆப் ஆர்டர்) கொண்டு எழுப்பினார். அப்போது அவர் பேசியதை பேரவைத் தலைவர் ப.தனபால் முழுமையாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார். எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின், துரை முருகன் வாக்குவாதம் செய்தனர்.
துரைமுருகன்: சட்டசபையில் ஒரு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பவும், விளக்கம் கேட்கவும் ஒவ்வொரு உறுப்பி னருக்கும் உரிமை உண்டு.
பேரவைத் தலைவர்: உங்கள் உரி மையை நான் மறுக்கவில்லை. 110-வது விதியில் முதலமைச்சர் பேசும்போது யாரும் குறுக்கிடவும், விமர்சிக்கவும் கூடாது என்று விதி உள்ளது. எனவே ஆஸ்டின் பேசியதை நீக்கினேன். துரைமுருகன்: 110-வது விதியின் கீழ் ஒரு பொருள் பற்றி மட்டும்தான் அறி விக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடு கிறார். அதை சுட்டிக்காட்டும் வகை யில்தான் அவர் ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்தார். முதலமைச்சர் அறி விப்பதை அமைச்சர்கள் பாராட்டி பேசு கிறார்கள். ஆனால் ஒரு உறுப்பினர் கருத்து சொல்லக் கூடாது என்பதை ஏற்க முடியாது.
மு.க.ஸ்டாலின்: விதிமுறையை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் எங்கள் உறுப்பினர் அதை கூறினார். அவரு டைய உரிமை மறுக்கப்படக் கூடாது. பேரவைத் தலைவர்: நன்றி தெரி வித்து மட்டும் பேசலாம். விமர்சிக்கக் கூடாது என்ற எனது உத்தரவை மீறிய தால்தான் அவரது பேச்சு நீக்கப் பட்டது. துரைமுருகன்: பேரவையில் நடை பெறும் விவாதம் அல்லது பேரவைத் தலைவரையும் மீறி அது திசை மாறி விடக்கூடாது என்பதற்காக தான் உறுப் பினர்கள் ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்து அதை சுட்டிக்காட்டு கிறார்கள். அந்த உரிமை உறுப்பினர்க ளுக்கு உண்டு. இதை அவைத் தலை வர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.