சென்னை , ஏப்.17சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பெரும் பிரச்னையை தரும் நோயாக சர்க்கரை நோய் மாறி வருகிறது. உணவுமுறை, பழக்க வழக்கங்களால் ஏற்படும் சர்க்கரை நோய் உடல் பயிற்சி, உணவு கட்டுப்பாடுகளையும் கொண்டது. இந்திய கலாச்சாரத்தில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் விரதம் இருத்தல், நோன்பிருத்தல் போன்றவை அனைத்து மதங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. விரதம், நோன்புபோன்றவை சில சமயங்களில் 8 மணி நேரம் முதல் 12மணி நேரம் வரை நீடிக்கும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள், விரதம் மேற்கொள்வது சாத்தியமானதா இல்லையா என்பதுபலருக்கும் எழும் சந்தேகமாக உள்ளது. விரதம்,நோன்பு மேற்கொள்ளும்போது சர்க்கரை அளவுகள்வேறுபட்டு உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம். நோன்பு முடிந்து விருந்து சாப்பிடும்போதும், ரத்தத்தில்சர்க்கரை அளவு தாறுமாறாக மாறலாம்.எனவே குறைவான வழவழப்பு தன்மை கொண்ட, அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மெதுவாக எரிசக்தியை உடலுக்கு தரும்.விரதத்துக்கு முன்பும் பின்பும் எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக கீரைவகைகள், தானிய ரொட்டிகள், பீன்ஸ், அரிசிஅதிக அளவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் சாலட்.நெய், சமோசா, பக்கோடா வகைகள் போன்றஉயர்வான நிறைந்த கொழுப்பு பொருட்களை குறைத்துக் கொள்ளவேண்டும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் நந்திதா அருண் கூறினார். சர்க்கரை உள்ள இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்.சமையலுக்கு குறைந்த அளவுஎண்ணெயை பயன்படுத்தவேண்டும். இனிப்பற்ற பானம் அல்லது தண்ணீரை அதிக அளவில் பகல் நேரங்களில் குடிக்கலாம். காபி, இனிப்பு பானங்களை தவிர்க்கவேண்டும். டாக்டர் ஆர்.எஸ் ஹரிசரன் கூறுகையில்,‘‘ சர்க்கரை நோய் உள்ளவர்கள், விரதம் இருக்க வேண்டும் என முடிவு செய்தால் விரதம் இருக்கும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவதுமிகவும் அவசியம்,’’ என்றார்.விரத மிருக்கும்போது அதிக, குறைந்த அளவு சர்க்கரை அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.