tamilnadu

img

தொழிற்சங்க தலைவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ந்தரவு செய்தவருக்கு எதிராக புகார் அளிக்க சென்ற சிஐடியு தலைவரை தாக்கிய வர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  செங்கல்பட்டு மாவட்டம் ,கல்பாக்கம் அணுசக்தி துறையில் சுரண்டலின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி யான ஊதியம், போனஸ், உள்ளிட்ட உரிமை கள் பெற்றிடவும், சிஐடியு சங்கத்தின் செயல் தலைவர், முதுபெரும் தொழிற்சங்க தலைவர் க.பழனிசாமி மீது சதுரங்கப்பட்டினம் காவல்நிலைய வளா கத்தில் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை புகாருக்கு உள்ளான ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் சிஐடியு சார்பில் கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் சங்க பொரு ளாளர் வேதநாயகம் தலைமையில்  இந்த போராட்டம் நடைபெற்றது.  கோரிக்கைகளை விளக்கி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தன லட்சுமி, மாநில குழு உறுப்பினர் எம்.கலைச்செல்வி, ஏஐடியுசி மாவட்ட ஜெக தீசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.ஜெயந்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் க. பகத்சிங் தாஸ் , உதவி பொதுச் செய லாளர் செல்வகுமார், சிபிஎம் திருக்கழுக் குன்றம் வட்டச் செயலாளர் ரபீக் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் தலைவர் இ.சங்கர் பேசினார்.