tamilnadu

img

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்  

சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்,பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவைகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

பருவ மழையால் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.