சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டியலை திங்க ளன்று (ஜூலை 29) பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முருகேசன் வெளி யிட்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளம் வேளாண்மை அரசு ஒதுக்கீட்டில் கன்னியாகுமரியை சார்ந்த ரேவதி 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், தருமபுரியை சேர்ந்த சுரேஷ் 195.25 இரண்டாம் இடத்தையும், சிதம்பரத் தைச் சேர்ந்த சௌமியா 194 மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதேபோல் வேளாண்மை சுயநிதியிலும், தோட்டக்கலை படிப்பிலும் மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப் படையில் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படு வார்கள். 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண் கள் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந் தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாண வர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 6 அல்லது 7ஆம் தேதி நடைபெறும். கலந் தாய்வு குறித்து மாணவர்களுக்கு குறுந்தக வல் அனுப்பப்படும். கலந்தாய்வு அட்ட வணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல் கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மாணவர் கல்விக் கட்ட ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், தேர்வு கட்டுப்பாட்டு அதி காரி செல்வநாராயணன், மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் ராம்குமார், வேளாண் துறை முதல்வர் சாந்தாகோவிந்த் உள்ளிட்ட துறைத் தலைவர்கள், பல்கலைக்கழக அதி காரிகள் கலந்து கொண்டனர்.