tamilnadu

img

கடன் வழங்குவதாக அறிவித்திருப்பது ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை..... சென்னை போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் தாக்கு....

சென்னை:
6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. இதனால் ஏழைஎளிய மக்களுக்கு பயனில்லை. எனவே, அடுத்த 6 மாதங் களுக்கு குடும்பத்திற்கு 7500 ரூபாய்நிவாரணம் வழங்க வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தினார்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி இரண்டாவது நாளாக செவ்வாயன்றும் (ஜூன் 29)தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் இணைந்து இந்தபோராட்டத்தை நடத்தின.

இதன் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரி தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிபிஎம் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: 

அடக்கவிலைக்கு இணையாக ஒன்றிய அரசு வரி போடுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல்  ஆண்டு இறுதிக்குள் 150 ரூபாய்க்கு சென்று விடும் என தெரிகிறது. பெட்ரோலிய  பொருட்களின் விலை உலகளவில் குறைந்து வருகிறது. ஒன்றிய அரசுகலால் வரியை பலமடங்கு உயர்த்தியதால், இந்தியாவில் மட்டும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே, கலால் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.சமையல் எரிவாயு, யூரியா, உரம், பெட்ரோலிய பொருட்களுக்கான மானியங்களை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. அதேசமயம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடந்த 5 வருடத்தில் 5.25 லட்சம் கோடி ரூபாய்வரிச்சலுகை, கடன் தள்ளுபடி செய்துள்ளது.  ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் தராமல், முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கிறது. பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு கொடுத்து வருகிறது.ஒன்றிய அரசு தடுப்பூசியை முறையாக வழங்காததால் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை தர மறுக்கிறது. செங்கல்பட்டில் 

உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தில், மாநில அரசு மருந்து உற்பத்தி செய்து கொள்ளவும் அனுமதி மறுக்கிறது. தடுப்பூசியில் கூடகார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பார்க்க ஏஜெண்டாக ஒன்றிய அரசு செயல்படுகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை திருத்தி உள்ளனர். இதனால் சமையல் எண்ணெய் 70 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுப்பாடின்றி உயர்கிறது. ஒன்றிய அரசை வலியுறுத்தி 3 நாட்கள் ஆயிரம்மையங்களில் நடைபெறும் போராட்டங் களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். ஒன்றிய அரசு தனதுஅணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிடில், இந்த ஆர்ப்பாட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தகே.பாலகிருஷ்ணன், “ஒன்றிய நிதியமைச்சர் 6.25 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்கஉள்ளார். ஏதோ மக்களுக்கு கொடுத்துள்ளதை போன்று ஊடகங்களில் விளம்பரப்படுத்துகிறார்கள். கடன் கொடுக்க உத்தரவாதம் தருகிறார்கள். கடன் யாரால் வாங்க முடியும்? இவையெல்லாம் ஏமாற்றுகிற வேலை” என்றார்.

சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்தப் ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந.பெரியசாமி, மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், விசிக மாநில நிர்வாகி இளஞ்சேகுவேரா, மாவட்டச் செயலாளர் கே.ரவிசங்கர், பகுதிச் செயலாளர் இளையா உள்ளிட்டோர் பேசினர்.