சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை 4.25 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.
மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டன. அதில் 2.3 லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டன.அவர்களில் 1.1 லட்சம் பேர் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்ததால் மற்ற தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டன.தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவு மற்றும் தேர்வில் நடைபெற்ற முறைகேடு களை தொடர்ந்து மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல் கலைக்கழகம் செய்து வருகிறது.அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மறுதேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தேர்வு எழுதிய 3,5,7-வது செமஸ்டர் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.