tamilnadu

img

சமூக இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும்

ஓட்டுநர்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை

சிதம்பரம், மே 20- சிதம்பரம், புவனகிரி பகுதியில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க  வேண்டுமென்று ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத்  தலைவர் முத்து தலைமையில் அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள்,  சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமஜனை சந்தித்து மனு அளித்தனர். அந்த  மனுவில், சிதம்பரம், புவனகிரி பகுதியில் ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்  றன. இதில் ஆயிரத்து 1200 ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர். இவர்களில்  50 பேர் மட்டுமே நலவாரியத்தில் பதிவு பெற்றுள்ளனர். இதனால் அரசு  அறிவித்த சொற்ப நிவாரணமும் பெரும்பாலானா தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. ஊரடங்கு தடை காலத்தில் ஓட்டுநர்கள் வருமானமின்றி அவதியுறு கின்றனர். எனவே, ஓட்டுநர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிவார ணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு அம்சங்களோடு ஆட்டோக்களை இயக்க அனுமதி வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட சார்  ஆட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.