தமிழக பாடத்திட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றார்.
மேலும், புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்