tamilnadu

img

அகில இந்திய விவசாயிகள் கையெழுத்து இயக்கம்

மின்சார வரைவு திருத்தச்சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நெல்லிக்குப்பத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெ.ராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில்  மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், பொருளாளர் எஸ்.தஷ்ணாமூர்த்தி, பகுதித் தலைவர் சம்பத், செயலாளர் ராமனுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.