சென்னை:
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கப்பட்ட தாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரி வித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்குப் பல்வேறுகோயில்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆணை பெற்ற அர்ச்சகர்கள்பணியில் இணைந்துள்ளனர்.இதற்கிடையே சில கோயில்களில் ஏற்கெனவே பணியில் இருக்கும் அர்ச்சகர்பணியிடத்துக்குப் புதிதாக அர்ச்சகர் களை நியமித்துள்ள தாகவும் ஏற்கெனவேபணிபுரிந்தவர்கள் வெளியேற்றப்பட்ட தாகவும் எதிர்க் கட்சியும் சமூக வலைத்தளங்களிலும் சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதுபற்றி அறநிலையத் துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ எழிலன் வலியுறுத்தினார்.
இதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போதுஅவர் பேசியதாவது:-
நம்மை ஆளாக்கிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுக்க வேண்டுமென்ப தற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தார். ஆனால், அது நடை முறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; அதற்கான பணி ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.
ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும்என்ற எண்ணத்திலே திட்டமிட்டு, பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.முன்னதாக பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,“ திருச்சியில் இரண்டு இடங்களில் அர்ச்சகராக பணியாற்றி வந்தவருக்கு ஒரு இடத்தில் மட்டுமே பணி வழங்கப்பட்டது. ஓய்வுபெற்றவராக இருந்தாலும் சாத்தூரில் மற்றொருவருக்கு அதே இடத்தில்பணி வழங்கப்பட்டுள்ளது. எங்கும் தவறு நடக்கவில்லை.சமூக வலை தளங்களில் வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானது. சிலர் வேண்டும் என்றே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்” என்றார்.