சென்னை,நவ.6- விவசாயம், நீர்நிலைகளை அழித் தொழிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள நிலஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க த்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
விவசாயிகளையும், விவசா யத்தையும், நீர்நிலைகளையும் அழித்தொழிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இச் சட்டத்தை உடனே திரும்பப்பெற வலியுறுத்துகிறோம்.
கடந்த 21.4.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா முன் மொழியப்பட்டது. அம்மசோதா அறி முகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆகஸ்ட் 23 இல் ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ் நாடு முழுவதும் 17.05.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பில் விவ சாயிகளிடம் மாநிலம் முழுவதும் கை யெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதன் பின்னர் 22.6.2023 அன்று சென்னையில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இச்சட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், பல்வேறு விவ சாய சங்கங்களும் கடும் எதிர்ப்பி னை தெரிவித்து வந்தனர். இதனால் தமிழக அரசு கடந்த ஓராண்டு கால மாக இச்சட்டத்தை கிடப்பில் போட்டி ருந்தது.
தற்போது இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டவிதி களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி யையும், விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. தமிழக அரசின் இச்செய லை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
திமுக கடந்த சட்டமன்ற தேர்த லுக்கான வாக்குறுதியில், அரசு திட்டங்களுக்காக நிலத்தை கை யகப்படுத்தும் போது விவசாயி கள் ஒப்புதல் பெற்று செயல் படுத்தப்படும் என்று கூறியிருந்தது. அந்த வாக்குறுதிக்கு நேரெதிரா னது இந்த சட்டம் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
இச்சூழ்நிலையில், தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனே திரும்பப்பெற தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்துவதோடு, எதிர்காலத்தில் விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர்நிலைகளை யும் பாதுகாப்பதற்கான நடவ டிக்கையில் தமிழக அரசு செயல்பட நினைத்தால் தற்போது கொண்டு வந்துள்ள நிலஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதே விவசாயிகளுக்கு செய்யும் நன்மையாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.