தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி அன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.