சென்னை:
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 27 சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மற்றும்நிர்வாகிகள் கலந்துகொண்டனர். எந்தெந்ததொகுதிகள் என்பதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.