வேலூர், ஏப். 21-வேலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.47 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 1.59 விழுக்காடு சரிந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 77 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இதில்அரசுப் பள்ளிகள் 2, அரசு உதவி பெறும் பள்ளிகள் 4,பகுதிநேரப் பள்ளிகள் 2, தனியார் பள்ளிகள் 69.12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் அரக்கோணம் ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98.43 விழுக்காட்டுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் அரசு, அரசுநிதியுதவி, மெட்ரிக், சுயநிதிபள்ளிகள் என 50 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் மின்னல் நரசிங்கபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2019ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தொடங்கப்பட்டதால் அப்பள்ளியில் தேர்வு நடைபெறவில்லை. இப்பள்ளியைத் தவிர 49 பள்ளிகளில் 5,113 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில், 4,536 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன்மூலம் இக்கல்வி மாவட்டம் 88.71சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.குருவராஜபேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 98.36 சதவீதத்துடன் 2ஆவது இடமும், பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 3ஆவது இடமும் பெற்றுள்ளன. தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 38 மாணவர்களில் 14 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று 38.88 விழுக்காட்டுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. இதில், அரக்கோணம்கல்வி மாவட்டத்தில் 9 மெட்ரிக். பள்ளிகள் 100விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.