tamilnadu

img

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கொரோனா பாதிப்பு

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது, புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு இதுவரை பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 30 பேரின் மாதிரிகள் அனுப்பியுள்ளோம்.இதில் தமிழகத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் மட்டும் மாறுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பு சிகிச்சை மையத்தில் தனியறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரிட்டனிலிருந்து வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வந்து அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பிலிருந்த 16 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்