சென்னை – பெங்களூர் சாலையில் அதிகரித்து வரும் விபத்துகள்
சென்னை, ஜூலை 15- சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிறன்று (ஜூலை 13) மகாவீர் நகர் பகுதி அருகே சாலை ஓரம் அமைக்கப் பட்டுள்ள தடுப்பு கம்பி வேலி மீது கார் விபத்து ஏற்பட்ட நிலையில் செவ்வா யன்று (ஜூலை 15) வாலாஜா அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேட்டரி பென்ஸ் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.