சென்னை,பிப்.9- மகப்பேறு மருத்துவத் தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருகின்ற தம்பதியரும், ஆகாஷ் குழந்தையின்மைக் கான சிகிச்சை மையத்தின் இயக்குனர்களுமான மருத்து வர்கள் டி.காமராஜ், ஜெய ராணி காமராஜ் ஆகியோர் இதுவரை 23,000க்கும் மேற்பட்ட குழந்தையில்லா தம்பதியரின் குடும்பத்தில் குழந்தைகளை தவழச் செய்து, அவர்களது குடும்பத்தினரை மகிழ்ச்சி யில் திளைக்கசெய்து வருகின்றனர். குழந்தையின்மை பிரச்சனை குறித்து பல்வேறு ஆராச்ச்சிகள் மேற்கொண்டு வரும் இந்த தம்பதியர், அந்த குறைபாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தீர்வு அளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ள னர். கடந்த 27 ஆண்டு களுக்கு முன்பாக வடபழனி யில் ஆகாஷ் குழந்தை யின்மை சிகிச்சை மையம் என்ற மருத்துவ மனையை நிறுவி நடத்திவரும் இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கோட்டூர்புரத்தில் தங்களது 2வது கிளையை துவக்கினர். இந்நிலையில் சென் னையை அடுத்துள்ள நன் மங்கலத்தில் (மேடவாக்கம் மெயின் ரோடு) 3வது கிளையை ஞாயிறன்று (பிப்.9) துவக்கினர். ஆர்.கே.பி. மதர் அண்ட் சைல்டு மருத்துவமனை நிறுவ னர்கள் மருத்துவர்கள் ஏ.சரவணன், ஜே.எஸ்.வித்யாலட்சுமி தம்பதிய ரோடு இணந்து நடத்தப்படும் ஆகாஷ் பெர்டிலிடி மையத்தினை மக்களவை உறுப்பினரும், வசந்த் தொழில் குழுமங்களின் தலைவருமான எச்.வசந்த குமார் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று துவக்கி வைத்தார். துவக்கவிழாவை யட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர். விழாவில் எச்.வசந்த குமார் பேசுகையில், “டாக்டர் காமராஜ் தம்பதியர் பல ஆண்டுகளாக நடத்திவரும் குழந்தையின்மை சிகிச்சை மையம் மூலம் ஏறக்குறைய 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களது சேவையை இப்பகுதியில் உள்ள மக்களும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். குழந்தையின்மை சிகிச்சை குறித்து இயக்கு நர்கள் கே.எஸ்.ஜெயராணி, டி.காமராஜ் ஆகியோர் கூறு கையில், “மருத்துவத்துறை யும், தொழில்நுட்பத்துறை யும் வளர்ந்து வருகின்ற அதே வேகத்திற்கு இணை யாக மக்களுக்கான பிரச்ச னைகளும் அதிகரித்து வரு கிறது. இதில் குழந்தை யின்மை பிரச்சனை மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவைகளை கண்ட றிந்து அதற்கான தீர்வளித் தால், நிச்சயம் அவர்க ளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்” என்றனர்.